Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
தொடர் மழையினால் தொடரும் மலையகத்தின் அவலம்...!

kotmala-landslide - தொடர் மழையினால் தொடரும் மலையகத்தின் அவலம்...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,299 Views
தொடர் மழையினால் தொடரும் மலையகத்தின் அவலம்...!

இயற்கை தந்த ஈடில்லா செல்வச்செழிப்புடன் காட்சி தர வேண்டிய மலையகம், வெள்ளத்தாலும், மண்சரிவாலும் நிறம்பிய நிலையில் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கொத்மலை, வெதமுல்லயில் நிகழ்ந்த கோரச் சம்பவம் இன்றும் நெஞ்சை நடுங்க வைக்கிறது. 25.09.2015 அன்று பிற்பகல் 2.30 மணிவரை இயல்பாக இருந்த வெதமுல்லயில் 2.45 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் இதுவரையில் ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில், நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் கொஸ்லாந்தை மீரியபெத்தையில், இடம்பெற்ற மண்சரிவில் முப்பத்தைந்து பேர் உயிரிழந்ததுடன், எண்ணூறு பேர் வரையில் இடம்பெயர்ந்தனர். அம்மக்களுக்கான நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படாத நிலையில் மீண்டும் ஒரு இயற்கையின் தாண்டவம் கொத்மலை, வெதமுல்லயினை தாக்கியிருக்கிறது. உறவுகளை இழந்த மக்கள் கூடாரங்களிலும் , உறவினர்களின் வீடுகளிலும் தற்போது தஞ்சம் புகுந்துள்ளனர்.

மண்சரிவு இடம்பெறுமென அடையாளம் காணப்பட்ட இடங்களில் இன்னும் மக்கள் வசித்தவண்ணம் உள்ளனர். எனினும் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதற்கான எதுவித முன்னெடுப்புகளும் இதுவரையில் அரசினால் முன்னெடுக்கப்படவில்லை. வெறுமனே வாக்குறுதிகளை மட்டும் வழங்கி விட்டு சுகபோக வாழ்க்கை வாழும் தலைவர்களுக்கு நம்மவர்களின் கதறல்களுக்கான, தீர்வு இன்றுவரை கிட்டவில்லை!!!

எவ்வாறாயினும் தொடரும் மலையக மக்களின் அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top