14,906 Views
நீலாங்கரையில் உள்ள விஜய் வீடு மட்டுமன்றி, 'புலி' படத்தின் தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இன்று சோதனை நட த்தப்பட்டமை தமிழக சினிமா வட்டார த்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் சினிமா தயாரிப்புக்கு நிதியளிக்கும் அளிக்கும் அன்பு வீட்டிலும் சோதனை நடைபெறுவதாகவும் 'புலி' படத்துக்கு அதிகமாக நிதி அளித்தது அன்பு தான் என்கிறது கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது
மேலும், விஜய் அடுத்ததாக நடித்து வரும் இயக்குநர் அட்லீ படத்தின் தயாரிப்பில் தொடர்புடையவர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அப்படத்தில் விஜய் நாயகியாக நடித்துவரும் சமந்தா, தயாரிப்பாளர் தாணு ஆகியோரது வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
விஜய் படங்களின் தயாரிப்புகளில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது வீடு மற்றும் அலுவலகங்கள் என 35 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறதா,. மேலும், இப்படத்தின் சென்னை விநியோக உரிமையை வாங்கியிருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறதாம்.
இச்சம்பவத்தின் விவகாரமான பக்கம் இவ்வாறு இருக்க மறுப்பக்கத்தில் விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் சுவாரஸ்யமாக மோதி வருகின்றனர்.
சோதனையால் விஜய் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். மேலும் பலர் படம் வெளியாகவுள்ள நிலையில் இச்சோதனை முன்னெடுக்கப்படுவதால் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.
இதேவேளை விஜய் ரசிகர்களுக்கும் , மற்றைய நடிகர்களின் ரசிகர்களுக்கும் சமூகவலைதளங்களில் இது தொடர்பில் மோதலே நடந்துவருகின்றனர்.
விஜயை வம்புக்கு இழுக்கும் வகையில் நிலைத்தகவல்கள், 'மீம்ஸ்'களை பகிர்ந்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் ரசிகர்களும் 'மீம்ஸ்' களை பகிர்ந்து வருகின்றனர்.
இச்சண்டையானது சமூகவலைதளங்களை கலகலப்பாக்கியுள்ளது.
இதேவேளை , அஜித் ரசிகர்கள் அவரை 'தல' என அழைப்பது போல விஜய் ரசிகர்கள் அவரை 'அண்ணா' என செல்லமாக அழைக்கின்றனர். இந்நிலையில் தமது அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர்.
இது தமிழக அரசின் சதியெனவும் , தமிழக முதலமைச்சரையும் சாடி வருகின்றனர். விஜயின் திரைப்படங்கள் கடந்த சில வருடங்களாகவே வெளியீட்டின் போது சிக்கல்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
