Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
06
திகில் அனுபவங்கள் பல வழங்கிய டிமான்டி காலனி தரைமட்டமாக்கப்பட்டது!

De Monte Colony demolished - திகில் அனுபவங்கள் பல வழங்கிய டிமான்டி காலனி தரைமட்டமாக்கப்பட்டது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,755 Views

அண்மையில் திரைக்கு வந்து வெற்றிபெற்ற திகில் திரைப்படம் டிமான்டி காலனி. 


அருள்நிதி நடித்திருந்த திரைப்படம் , ஒரு பங்களா ,அதில் உலாவுவதாக கூறப்படும் ஆவி மற்றும் அங்கு விஜயம் செய்ததன் பின்னர் நண்பர்களுக்கு ஏற்படும் நிலை தொடர்பானதாகும்.

எனினும் சென்னையில் உண்மையாகவே டிமான்டி காலனி என்ற பெயரில் ஒரு இடம் இருகின்றமை பலருக்கு தெரியாது. மேலும் அவ்விடம் பற்றி நீண்டநாட்களாக பல கதைகள் உலாவருகின்றன.

அங்கு அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும் , ஆவி , பேய் என பல கதைகள் இதில் அடக்கம். இது தொடர்பில் கூகுளில் தேடும் பட்சத்தில் பல தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில் பயன்பாடு இல்லாமல் கிடந்த டிமான்டி காலனி இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் டிமான்டி காலனி உள்ளது. பல ஆண்டு காலமாக இந்த காலனி பயன்பாடு இல்லாமல் இருந்துள்ளது.

டிமான்டி காலனியில் முன்பு குடியிருந்த மக்களும், ரியல் எஸ்டேட்காரர்களும் வேண்டுமென்றே அங்கு அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக வதந்தியை பரப்புவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் டிமான்டி காலனியை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

தற்போது சென்னை-மயிலாப்பூர் ஆர்க் டயோசிஸ் நிர்வாகிகள் இதனை நிர்வகித்து வருகின்றனர். டிமான்டி காலனி இடிக்கப்பட்டது குறித்து அவர்கள் கூறுகையில், " ஆதரவற்ற குழந்தைகள், விதவைப் பெண்களை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தில்  உருவாக்கப்பட்டது.  இந்த சொத்தை கையாள்வதில் நிறைய குளறுபடிகள் நிலவி வருகின்றன. அவற்றை தீர்த்து முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top