கொண்டயாவின் சட்டத்தரணி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
FR petition by Kondaya's lawyers - கொண்டயாவின் சட்டத்தரணி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
சிறுமி சேயா சதௌமி கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட 'கொண்டயா' எனப்படும் துனேஷ் பிரியஷாந்தவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
கொண்டயா கைது செய்யப்பட்டிருந்த வேளையில், குற்;ற விசாரணை திணைக்களத்தினர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் தாக்குதல் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியதாக இந்த முறைப்பாடு அமைந்துள்ளது.
இந்த முறைப்பாட்டை செய்ததன் பின்னர், கொண்டயாவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
கொடதெனியாவ சிறுமி சேனா சதௌமி கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் மற்றும் குடும்பஸ்தர் ஆகியோர் இதற்கு முன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.