5,356 Views
ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் அடுத்தப் படத்தை இயக்க உடனே தயாரானார். அந்தப் படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வந்தன. பிறகு நடிகர்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதுதான் சிக்கலாகிவிட்டது.
துல்கர், இரண்டு மலையாளப் படங்களில் பிஸியாக உள்ளார். டிசம்பருக்குள் அந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிவடைய வாய்ப்பில்லை என்பதால் அவருக்குப் பதிலாக தெலுங்கு நடிகர் நானியைத் தேர்வு செய்தார் மணி ரத்னம். அதேபோல தேதி பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து நடிகை கீர்த்தி சுரேஷும் விலகினார். கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக வேறொரு கதாநாயகியைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் மணி ரத்னம் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஏற்கெனவே ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்துவிட்டதால் படத்தைக் கைவிட அவர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சரியான நடிகர்கள் இல்லாமல் இந்தப் படத்தை இயக்குவது சரியாக இருக்காது. நல்ல நடிகர்கள் கிடைக்கும் வரை முதலில் இன்னொரு படத்தை எடுத்துவிடலாம் என்று அவர் களமிறங்கியுள்ளதாகத் தெரிகிறது. எனவே இப்போது இளம் நடிகரை வைத்து புதிய படம் ஒன்றை மணி ரத்னம் ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி: இந்திய ஊடகம்