2,598 Views
"எமது அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்காக நாம் பல்வேறு முன்னேற் றகரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். இடைக்கால அரச நிதி ஒன்றிணைப்பினூடாக வரவு செலவு திட்ட துண்டுவிழும் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.5 வீதம் வரை குறைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த இலக்கை 2020 ஆம் ஆண்டாகும் போது பூர்த்தி செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
நிதியமைச்சின் சிரேஷ்ட கவனம், அரச வருமானத்தை அதிகரித்தல், மீண்டு வரும் செலவினம் மற்றும் மூலதன செலவினத்தை திட்டமிடல் மற்றும் கட்டுப்படுத்தல் மீது கவனம் செலுத்தப்படும்.
ஆரம்ப நடவடிக்கையாக எமது மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவோம். சுமார் 30 இலட்சம் மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமையை பெற்றுக் கொடுப்போம். காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்திற்கு அமைய மக்களுக்கு உறுதிப்பத்திர முறையொன்றின் அடிப்படையில் காணி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
10 வருடங்களுக்கு மேலாக அனுமதிப்பத்திரம் பெற்ற காணிகளில் வாழும் சகலருக்கும் நாம் காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்போம். அரசாங்கத்தின் வாடகை வீடுகளில் 10 வருடங்களுக்கு மேலாக குடியிருப்போருக்கு அந்த வீடுகளின் உரிமை முழுமையாக பெற்றுக்கொடுக்கப்படும். தோட்டங்களில் லயன் அறைகளில் 10 வருடங்களுக்கு மேலாக வாழும் தொழிலாளர்களுக்கு சிறிய காணியுடன் வீட்டு உரிமை பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.
கிராமிய வீட்டுத்திட்டங்கள் பலவும் எம்மால் ஆரம்பிக்கப்படும். 5 வருட காலத்திற்குள் கிராமிய, சிறிய நகரங்கள் மற்றும் நகர்ப்பிரதேசங்களின் வீட்டுப்பிரச்சனைகளுக்கு முற்றுமுழுதாக தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும், இதனடிப்படையில் 500,000 புதிய வீடுகளை அமைப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவோம்.