இணையப் பாவனையாளர்களுக்கான சட்டம்
இணையம் என்பது அனைவரின் கைகளிலும் உள்ள ஒன்றாக மாறிவிட்டது இணைய பாவனையாளர்களுக்கான எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வாரத்தில் ஒரு இணையபாவனையாளர் 13 மணித்தியாலங்கள் தேவையற்ற விடயங்களை பார்பதற்காக செலவிடுகின்றார்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
நல்ல விடயங்கள் பல இருந்தாலும் சிலர் இணையத்தினூடாக பலரைப்பற்றி பொய்யான தகவல்களையும் ஒருவரை அவதூறு செய்யும் விதத்திலும் மற்றவர்களுக்கு எதிராக அச்சுறுத்துகின்ற விதமாகவும் மற்றும் துஷ்பிரயோகமான விடயங்களையும் இணையதளத்தில் வெளியிடுகிறனர்.
அப்படியான குற்றங்களுக்கு இப்போது அதிகபட்சமாக 6 மாதங்களே தண்டனை வழங்கப்படுகின்றன. ஆனால், இனி இரண்டு ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது .
இந்த பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால், இப்படியான நபர்களை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடிவதோடு இணைய துஷ்பிரயோக சம்பவங்களும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் அமுலாகவிருக்கும் இந்த சட்டம், இலங்கையிலும் அமுலாக்கப்பட்டால் இணையவழிக் குற்றங்கள் குறைவதற்கான வாய்ப்பு இங்கும் இருக்கும் என்று நம்பியிருப்போம்.
இணையத் தகவல்களினை அடிப்படையாகக் கொண்டு
தொகுத்து தந்தது
-வர்ஷி-