இந்தியாவின் ஒடிசாவின் புர்லாவில் எனும் பகுதியிலுள்ள மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் குழுவொன்றினாலேயே, இந்தப் பெண்ணின் தலையில் இருந்து 70 ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த சத்திர சிகிச்சை முடிந்த மறுநாள் குறித்த சத்திரசிகிச்சை நிபுணர்கள், மீண்டும் ஒரு சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு மேலும் 7 ஊசிகளை அந்தப்பெண்ணின் தலையில் இருந்து அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு சத்திர சிகிச்சைகளின் மூலமாகவும் மொத்தமாக 77 ஊசிகள் அகற்றப்பட்டுள்ளதுடன், அதிர்ஷ்டவசமாக, ஊசிகளால் தலையில் காணப்பட்ட எலும்புகளில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் , ஆனால் அவரது தலையில் உள்ள மென்மையான இழையங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
தனக்கு தலையில் ஏற்பட்ட வலி காரணமாக மந்திரவாதி ஒருவரை அவர் சந்தித்த பின்னர், இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது தாயார் இறந்ததிலிருந்து அடிக்கடி நோய்வாய்ப்பட்ட குறித்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். இதனையடுத்து அண்மையில் அவரது தலையில் தொடர்ச்சியாக வலி ஏற்பட்டதாக அவர் கூறிவந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோசடியாக நடந்து கொண்ட மந்திரவாதி தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.