சுந்தர்.சி இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றவை.தற்பொழுது நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் 'கேங்கர்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
'வின்னர்' திரைப்படத்தின் கைப்புள்ள, 'தலைநகரம்' திரைப்படத்தின் நாய் சேகர், 'நகரம் மறுப்பக்கம்' திரைப்படத்தின் ஸ்டைல் பாண்டி போன்ற கதாபாத்திரங்கள் என்றென்றும் இரசிக்கக் கூடியவை.
இந்த 'கேங்கர்ஸ்' திரைப்படத்தில் பெண் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.
"கேங்கர்ஸ்" திரைப்படம் இம்மாதம் 24 ஆம் திகதி திரைக்கு வரவுள்ள நிலையில் திரைப்படத்தின் Trailer ஐ இன்று வெளியிடவுள்ளதாக திரைப்படக்குழு poster ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.