குங்குமப்பூ ஏராளமான மருத்துவ நலன்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. குங்குமப்பூச்செடி, மத்திய தரைக்கடல் பகுதிகளில் தோன்றியதாக நம்பப்படுகிறது.
குங்குமப்பூவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குங்குமப்பூ, உடலுக்கு குளிர்ச்சியைத் தருகின்றது. மேலும் உதடுகளின் வறட்சி மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது. மேலும், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் குங்குமப்பூ அமைகிறது.
நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு குங்குமப்பூ மருந்தாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும் இது பயன்படுகிறது.