தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளுடைய திருமண விழா சென்னையில் பிரம்மாண்டமாக இடம் பெற்றது. இத் திருமணத்திற்குப் பெரும்பாலான திரைப் பிரபலங்கள் நேரில் சென்று மணமக்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
அந்த நிகழ்வில், இசையமைப்பாளரும் நடிகருமான G.V.பிரகாஷ் குமாரும் கலந்து கொண்டிருந்தார். அவர் நடிகை ஒருவருடன் வந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதைப் பார்த்த பலரும் அந்த நடிகை யார் என்று தெரியாமல் G.V.பிரகாஷ் குமாரை விமர்சித்தனர்.
ஆனால், உண்மையில் அவருடன் வந்த நடிகை 'விடுதலை' பாகம் 1இல் நடித்த பவானி ஸ்ரீ. இவர் G.V.பிரகாஷ் குமாரின் தங்கையாவார்.
முன்னதாக நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வந்த விடயம் திரையுலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது