நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த முதலாம் திகதி வெளியான 'ரெட்ரோ' திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 'ரெட்ரோ' திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் வெளியாகிய நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் Block Busterஆகவில்லை என்ற சூர்யா இரசிகர்களின் கவலையை 'ரெட்ரோ' திரைப்படம் நீக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இதுவரை வெளியாகிய சூர்யாவின் திரைப்படங்களுக்குக் கிடைக்காத மிகப்பெரிய Opening 'ரெட்ரோ' திரைப்படத்திற்குக் கிடைத்திருந்தது .வெளியாகிய முதல் வாரத்திலேயே இத் திரைப்படம் இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து தற்போது உலக அளவில் இந்திய மதிப்பில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
'ரெட்ரோ' திரைப்படத்தின் இந்த வெற்றியை மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது X தளப் பக்கத்தில், "அனைத்து அன்பான இரசிகர்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டு வசூலின் உத்தியோகபூர்வ புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார் நடிகர் சூர்யா.