உலகின் முதல் AI நகரத்தை அபுதாபி உருவாக்கி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 2027 ஆம் ஆண்டில் இந்த நகரம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நகரத்தில் ஓட்டுநர் இல்லாத போக்குவரத்து அமைப்புகள், Smart வீடுகள், சுகாதாரம், கல்வி மற்றும் எரிசக்தி என அனைத்திற்கும் இந்த நகரம் AI-அடிப்படையிலான தீர்வுகளைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
செயற்கை நுண்ணறிவின் முழுமையான திறனையும் பயன்படுத்தும் ஒரு நகரத்தையே அபுதாபி திட்டமிட்டுள்ளது.
இந்த AI Smart நகரத்தின் பெயர் ‘அயன் சென்சியா ’ ஆகும்.
இந்த நகரத்தை அபுதாபியை தளமாகக் கொண்ட BOLD Technology மற்றும் இத்தாலிய Real Estate Developer ஆகிய நிறுவனங்களே உருவாக்கி வருகின்றன.
அயன் சென்சியா Smart நகரமாக மட்டுமல்லாமல், அறிவியல் நகரமாகவும் இருக்கும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
திட்டமிடல், இயக்குதல் மற்றும் பரிமாற்றம் என்ற மாதிரியில் கட்டமைக்கப்படும் இந்த நகரத் திட்டத்தின் செலவு 250 மில்லியன் டொலர் ஆகும்.
அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.