1974 ஆம் ஆண்டு "அவள் ஒரு தொடர்கதை" எனும் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் 1979ஆம் ஆண்டு வெளிவந்த "கன்னிப் பருவத்திலே" எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராகத் திகழ்ந்தவர்.
இவர்150ற்கும் மேற்பட்ட தமிழ், மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.இறுதியாக விஜய் சேதுபதி நடித்த "Merry Christmas" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்திருந்தார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் பயணித்துவந்த ராஜேஷ், தனது 76ஆவது வயதில் மூச்சுத் திணறல் காரணமாக இன்று காலமானார். இவருடைய மரணம் தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே நடிகர் ராஜேஷின் மரணத்திற்கு, பல திரையுல நட்சத்திரங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.