அண்மையில் Veo 3 ஐ Google அறிமுகப்படுத்தியது.
Veo மற்றும் Veo 2 மொடல்களை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த Veo 3 என்ற AI Generator வெளிவந்துள்ளது.
இதன் சிறப்பு என்னவென்றால் உரையாகவும், படங்களாகவும் கொடுக்கப்படும் உள்ளீடுகளுக்கு, நிஜமான உலகில் உள்ள இயற்பியலுடனும் சரியான உதட்டசைவுடனும் சத்தத்துடனும் கூடிய Videoவை உருவாக்கிக் கொடுக்கும்.
இதன் மூலம் நிஜமாகத் தெரியும் காட்சிகள் முதல் Animation, கற்பனை போன்ற அனைத்தையும் இந்த Veo 3 மூலம் உருவாக்க முடியும்.
Veo 3 ஆனது Audioவை இணைத்து ஒரு புதிய உயரத்திற்குச் சென்றுள்ளது. தற்போது இந்த Update அமெரிக்காவில் Google Gemini செயலியில் மாத்திரமே கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது AI மூலம் உருவாக்கப்பட்ட Video என்று அடையாளப்படுத்தி, Deepfake மற்றும் தவறான தகவல்களைத் தடுக்க உதவுகிறது.