Helpitiya deaths - ஹெல்பிடிய இளம் காதல் ஜோடியின் மரணம்: கொலை என உறுதி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
9,143 Views
காலி - ஹெல்பிடிய - ஹன்தாஹெலன நீர்வீழ்ச்சி பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்ட காதலர்களின் மரணம் தற்கொலை அல்ல கொலை என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் தலை ஆயுதமொன்றால் தாக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதே வேளை உயிரிழந்த இளைஞனின் கழுத்து இறுக்கப்பட்டு இருந்ததாக பிரேத பரிசோதனையின் போது வெளிவந்துள்ளது.
18 வயதான யுவதி மற்றும் 23 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். இருவரும் காதலித்து வந்தமையை வீட்டிலிருந்தோர் அறிந்திருந்துள்ளனர்.
எனினும் அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இருவரும் உயிரிழந்தமையானது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.