"அம்மா"வுக்கு கோயில் கட்டும் லோரன்ஸ்.அம்மா என்ற வாரத்தையை உச்சரித்தால் இப்போது எல்லோர் மனதிலும் தங்கள் அம்மாவை காட்டிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தான் நினைவுக்கு வந்து போகின்றார்.
இப்படியிருக்க அம்மாவுக்கு நான் கோவில் கட்ட போகின்றேன் என்று அசத்தல் அறிவிப்பு விட்டிருக்கின்றார் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.
எல்லோருக்கும் கண்ணெதிரே தெரியும் ஒரே தெய்வம் எங்களை பெற்ற தாய்தான். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற உயரிய கருத்தை மெய்பிக்க வேண்டும் என்ற ஆசையால் இந்த கோயிலை கட்ட உள்ளேன்.உலகத்தில் உள்ள எல்லா அன்னையர்க்கும் நான் இதை சமர்ப்பிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கோவில் கட்டும் பணியின் முதல் கட்டமாக அவரது தாயாரின் உருவச் சிலையை வடிவமைக்கும் பணியை ராஜஸ்தான் மாநிலத்தில் ஆரம்பித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்னைக்கோர் ஆலயம் எனும் அரிய முயற்சியில் இறங்கியிருக்கும் ராகவா லோரன்ஸ்சுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.
*தில்லையம்பலம் தரணீதரன்