#sooriyanfm #news - தெமடகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் கடத்தல் தொடர்பில் ஹிருனிக்கா பிரேமசந்திரவிடம் மேலும் ஒரு வாக்கு மூலம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,657 Views
தெமடகொடவில் இளைஞர் ஒருவரை கடத்தியமை தொடர்பில், ஹிருனிகா பிரேமசந்திரவிடம் மீண்டும் காவற்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடத்தலின் போது ஏற்படுத்தப்பட்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெமடகொடயில் வைத்து 34 வயதான ஒருவரை ஹிருனிகாவின் பாதுகாப்பு தரப்பினர் அவரது பாதுகாப்பு வாகனத்தின் ஊடாக பகல் பொழுத்தில் கடத்திச்சென்றனர்.