காதல் பற்றி மனம் திறக்கிறார், நடிகை அனுஷ்கா...!
Anushka staement of love - காதல் பற்றி மனம் திறக்கிறார், நடிகை அனுஷ்கா...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
தற்போதைய தமிழ் சினிமா உலகின் முன்னணி கதாநாயகிகள் வரிசையில் நடிகை அனுஷ்காவிற்க்கும் நல்லதொரு இடமுண்டு.தமிழ் மாத்திரமல்லாது தெலுங்கு,மலையாள திரைப்படங்களிலும் அனுஷ்கா தனக்கான முத்திரையினை சிறப்பாகவே அமைத்துள்ளார்.
கடந்த வருடம் அனுஷ்கா நடிப்பில் எல்லோராலும் அதிகளவில் பேசப்பட்ட ''என்னை அறிந்தால்,பாகுபலி,ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி'' ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
இந்த நிலையில் அனுஷ்கா தற்போது பாகுபலி 2 ம் பாகத்திலும்,S-3 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.S-3, சிங்கம் படத்தின் 3 ம் பாகமாக தயாராகி வருகிறது.இந்த திரைப்படத்திலும் அனுஷ்கா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சினிமாவிலேயே அதிகம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அனுஷ்காவிற்கு இப்போது 34 வயதாகிறது.எனவே அவரது பெற்றோர்கள் அனுஷ்காவிற்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாகவும் அவருக்கு இப்போதே நல்ல மாப்பிள்ளையை தேடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காதல் மற்றும் திருமணம் குறித்து, அனுஷ்கா தனது கருத்தினை தெரிவித்தார். காதல் என்பது வெறும் கவர்ச்சி மட்டுமே. அது ஒரு மாயை. இளவயதில் ஏற்படுகின்ற ஓர் உணர்வு. அந்த மாயை தான் எல்லோர் வாழ்க்கையிலும் புரட்சியை கொண்டு வருகிறது. எனக்கு காதல் அனுபவம் இல்லை. அதற்கு நேரமும் இல்லை. நான் காதலிப்பது சினிமாவை தான்.
என்னுடைய திருமணம் நேரம் வரும் போது நடக்கும். எனது கணவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் அத்தோடு அவர் எதுவித ஒளிவு மறைவுகளும் இல்லாதவராக இருக்க வேண்டும். எனக்கு பிடித்த விஷயங்கள் அவருக்கும் பிடித்திருக்க வேண்டும். அப்படி ஒருவரை சந்தித்தால் நான் திருமணம் செய்து கொள்வேன்.
மேலும் கடந்த வருடம் எனது திரைப்படங்கள் நல்ல பெயரை பெற்றுத் தந்தன.அதேபோல் இவ்வருடமும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் எனது பாத்திரத்தை சிறப்பாக நடிப்பேன் என்றும் அனுஷ்கா கூறியுள்ளார்.