தோல்வி தந்த இயக்குனருடன் 60 ஐ தொடங்கினார் விஜய் .
விஜயின் 59 வது படம் தெறி அட்லியோ இணைந்திருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக இப்போது நிறைவுக்கு வந்திருக்கிறது .இறுதிக்கட்ட வேலைகள் முடிந்து விட்டால் படம் சித்திரைப் புத்தாண்டுக்கு வெளியாகிவிடும் .
புலி படத்தில் இருந்து ஓய்வில்லாமல் நடித்துவரும் விஜய் புலி முடிந்த கையோடு இடைவெளி எடுத்துகொள்ளாமல் உடனே அட்லியோடு தெறியை தொடங்கியிருந்தார் .ஆனால் இப்போது சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட விஜய் தன்னுடைய 60 வது படத்தையும் தொடங்கிவிட்டார் .
இதில் ஆச்சரியம் என்னவென்றால் தன்னுடைய சினிமா வாழ்கையில் மிகப்பெரிய தோல்வியை கொடுத்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதனுக்கு விஜய் இப்போது அறுபதாவது பட வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் .இதுதான் கோடம்பாக்கத்தில் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது .
எது எப்படி இருந்தாலும் தனக்கு தோல்வி கொடுத்த இயக்குனரின் கதையோடு விஜய் தன் அடுத்த படத்தைக் கொடுக்கப்போகிறார்.படத்தின் பூஜையும் அண்மையில் மிக எளிதாக ஆரம்பமாகியிருக்கிறது .