தீவிரவாதிகளுடன் தொடர்பைப் பேணிய, தீவிரவாத ஆதரவு செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 27 பங்களாதேஷ் நாட்டவர்கள் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிங்கப்பூரில் கட்டுமாண துறையில் பணியாற்றியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் உள்நாட்டு அமைச்சின் தகவல்களின் படி குறித்த நபர்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
ஐ.எஸ் மற்றும் அல்-கொய்தா ஆதரவாளர்களாக கருதப்படும் இவர்கள் தம்மிடையே தீவிரவாத பிரச்சார பொருட்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர்.
வாராந்தம் சந்திப்பு ,தீவிரவாத ஆயுதப்போராட்டம் குறித்த கலந்துரையாடல்கள் போன்றவற்றையும் இவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பங்களாதேஷ் இளைஞர்களை தமது குழுவில் இணைத்துக்கொள்ள இவர்கள் திட்டமிட்டிருந்துள்ளனர்.
மேலும் மத்தியகிழக்கில் தீவிரவாத இயக்கங்களில் இணையவும் இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.
இவர்கள் கடும்போக்கு இயக்கங்களுக்கு நிதிப் பங்களிப்பு செய்துள்ளமையும் விசாரணைகளில் வெளியாகியுள்ளது.