விஜய் சேதுபதி இனிமையானவர் ரம்யா நம்பீசன் உருக்கம்.
தற்போதைய நடிகர்களுள் விஜய் சேதுபதிக்கென ஒரு ரசிகர் வட்டாரம் உண்டு .இவரது பீட்சா படத்தை யாராலும் மறக்க இயலாது .இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ரம்யா நம்பீசன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார் .சேதுபதி பற்றி ரம்யா புகழ்ந்து இருக்கிறார் .நான் எத்தனையோ நடிகர்களை பார்த்திருக்கிறேன் .விஜய் சேதுபதியை போல ஒரு எளிமையான இயல்பான நடிகரை பார்த்ததில்லை .
பீட்சா படம் வந்த போது அவர் பெரிய நடிகரில்லை இப்போது அவர் உயரம் வேறு .ஆனால் பீட்சா படப்பிடிப்பில் எப்படிப்பட்ட விஜய் சேது பத்தியை பார்த்தேனோ அதே மாதிரித்தான் சேதுபதி படபிடிப்பிலும் பார்த்தேன் .அதே எளிமை ,அதே இனிமை .பீட்சா படம் முடிந்த பிறகு அவரிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லை .இரண்டு வருடங்களுக்கு பிறகு மதுரையில் சேதுபதி படபிடிப்பில்தான் அவரை பார்த்தேன் .ஒரு ஹாய் ஹல்லோ வுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார் .
சேதுபதி படத்தில் எனது பாத்திரம் இரண்டு குழந்தைக்கு தாய் என்றார் இயக்குனர் .விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றால் கதை நல்லாத்தான் இருக்கும் என்று உடனே ஒத்துக்கொண்டேன் .தொடர்ந்து சேதுபதியின் பட வாய்ப்புக்காக காத்திருப்பேன் என கூறி உள்ளார் .
இது இப்படி இருக்க போலிசாக நடிக்க நான் ரொம்ப பயந்தேன் என விஜய் சேதுபதி கூறி உள்ளார் .தினேஷ் தான் தனக்கு துணிச்சல் அளித்து நடிக்க வைத்தார் என சேதுபதி கூறி உள்ளார் .