Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
இசை வெளியீட்டில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் - நன்றி மறவாத சிவமணி

a.r took part sivamanis album relese - இசை வெளியீட்டில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் - நன்றி மறவாத சிவமணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,323 Views
அண்மையில் வெளியாகி வெற்றிக்கொடி நாட்டிய "ஈட்டி" என்ற சூப்பர்ஹிட் திரைப்படம் நடிகர் அதர்வாவை தமிழ் சினிமாவின் முன்னோக்கிய வேகமான பாய்தலுக்கு கூர் தீட்டியிருக்கின்றது. "ஈட்டி"யின் பாய்தலில் வெற்றி கண்ட அதர்வா, அந்த வெற்றியை தக்கவைக்கும் கனவோடு நடித்து வெளியாகவிருக்கின்றது "கணிதன்."
டி.என். சந்தோஷ் இயக்க, 'ட்ரம்ஸ்' சிவமணியின் இசையோடு கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் இந்த "கணிதன்" திரைப்படத்தில் அதர்வாவுடன் நாயகியாக கேதரின் தெரசா இணைய, தரூன் அரோரா, கே.பாக்யராஜ், மனோபாலா, கருணாகரன், வை.ஜி.மகேந்திரா உள்பட பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.

ஒருசில படங்கள் தொடர் தோல்வி கண்டாலும் சோர்ந்து விடாத அதர்வாவின் முயற்சிக்கு முகவுரை கொடுத்து, தற்போது அவரையும் தமிழ் சினிமாவில் எல்லோரும் கவனிக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியுள்ள "ஈட்டி"யுடன் இணையப்போகின்றது விஞ்ஞானத்துடன் தொடர்புடைய கதைக்கருவுடனான "கணிதன்" திரைப்படமும். விரைவில் வெளிவரவிருக்கும் இந்த படத்திற்காக அதர்வா நிறையவே கவனமேடுத்திருப்பதாவும், கடுமையாக உழைத்துள்ளதாக சொல்கிறார்கள் படக்குழுவினர்.

இது இப்படியிருக்க, முன்னர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ட்ரம்ஸ் வாத்தியக்கலைஞராக இருந்த புகழ்பெற்ற 'ட்ரம்ஸ் சிவமணி' அரிமா நம்பி திரைப்படத்துக்குப் பின்னர் மீண்டும் இசையமைப்பாளராகும் படமான இந்த "கணிதன்" படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 27-ம் திகதி(இன்று) சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், இந்த படத்தின் முதல் இசை இறுவட்டு (டிவிடி)யை ஒஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடவுள்ளார். அவர் வெளியிடும் அந்த இசை இறுவட்டை பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொள்ளவுள்ளாராம்.

தன்னை இசைத்துறைக்கு கொண்டுவந்த ஏ.ஆர்.ரஹ்மானை நன்றி மறக்காத சிவமணி தனது இசை இறுவட்டை வெளியிட அவரை அழைத்துள்ளார். பெருந்தன்மை கொண்ட இசைப்புயலும் அந்த அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருக்கின்றார் என்கிறார்கள் திரைத்துறையினர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top