உலகில் மிக முக்கியமான பிரபல தம்பதிகளில், அன்னியோன்னியமான உதாரண புருஷர்களாக திகழ்கின்றவர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது பாரியார் மிசேல். அந்தளவுக்கு பிரபலமானவர்கள் இருவருமே !
இப்பொழுது சொல்ல வந்த விஷயம் என்ன என்றால், இவர்களது வாழ்க்கை ஹொலிவூட்டில் படமாகவுள்ளது.
'' சௌத் சைட் வித் யூ '' எனும் இந்தப் படத்தை ரிச்சர்ட் டானெஇயக்குகிறார்.
1989 முதல் இருவருக்குமிடையில் மலர்ந்த காதல் முதல், பரிமாறிக்கொண்ட அன்பு, முத்தங்கள், அன்பளிப்புக்கள், திருமண வாழ்க்கை, குழந்தைகளின் அரவணைப்பு என்று அத்தனை பகுதிகளும் இந்தப் படத்தில் காட்சியாகவுள்ளன.
ஒபாமா வேடத்தில் நடிக்க வைக்க நடிகர் தேர்வு இடம்பெற்று வருகின்ற நிலையில், மிசேல் பாத்திரத்தில் பிரபல நடிகை டிக்கா சம்ப்டர் நடிக்க தெரிவாகியுள்ளார்.
2015 இன் நடுப்பகுதியிலே படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும், ஒபாமா சம்மதம் கொடுத்துள்ளதாகவும் உண்மை விளம்பிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒபாமாவும் வந்தாச்சா ...?