சென்னை 28 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நாயகனாக வந்து குதித்த ஜெய்க்கு, அதிஷ்டம் கரம்கொடுக்க அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் குவிந்தன. அத்தனையும் நன்றாக ஓடிய படங்களின் பட்டியலுக்குள் இருக்க, வாய்ப்புக்கள் இன்னும் அதிகரித்து இவரது ஒப்புதலுக்காக வாசலிலே பல படாதிபதிகள் காத்துக் கிடக்க ஆரம்பித்தார்கள்.
எளிமையான நடிப்பு, எகத்தாளமில்லா அமைதியான பாணியில் நடித்த ஜெய்யை இரசிகைகளைப் போலவே இரசிகர்களுக்கும் அதிகமாய் பிடித்துப் போனது. இப்படி பல படங்களை கடந்து இப்போது ஐந்து படங்களில் ஒரேடியாக நடித்துவரும் இந்த இளைய நாயகனுக்கு இப்பொழுது ஒரு அவப் பெயர் வந்து சேர்ந்திருக்கிறது.
நீங்க யோசிக்கலாம் சினிமாவில இதெல்லாம் புதுசாப்பானு...
இல்லைதான்! ஆனாலும், குடித்துவிட்டு போதையில் போலீசிடம் சிக்குவது என்பது கொஞ்சம் அநாகரிகமானது என்பது மக்கள் கருத்து.
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திலும் மிதந்தபடி தன்காரில் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த பொது, போலீசார் இடைமறித்து விசாரித்தபோது, ஜெய் குடித்திருப்பதும் வாகனத்தை செலுத்தி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
ஜெய்யை நடிகரென போலீசாருக்கு தெரியாது. இதற்குள் அப்பகுது மக்கள் குவிய, தலையை கவிழ்ந்தபடி வேகமாக அந்த இடத்தைவிட்டு வெளியேறியிருக்கிறார்.
என்னப்பா தம்பி நீங்க? வளர்ந்து வர்ற நேரத்தில இப்பிடியெல்லாம் பண்ணப்படாது.