உங்களுக்கு நினைவிருக்கலாம், கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்தியா வென்றால், நிர்வாணமாக போஸ்கொடுப்பேன் என்று அறிக்கை விட்டு பல தரப்பிடமும் சிக்கி சின்னாபின்னமானவர் நடிகை பூனம் பாண்டே.
இவரது அரை நிர்வாணப் படங்கள் கூட இணையங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஒரு தரப்பு ஆச்சர்யமாக பேச, இன்னொரு தரப்பு வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியிருந்தது, பூனம் பாண்டே இத்தோடு இல்லாமல் போக வேண்டுமென்று!
இப்போது இந்த சர்ச்சையரசியை தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
பெயரை வைத்தே படத்தை ஓட்டும் திட்டமோ என்னவோ?
பூனம், தமிழில் ''மைதிலி அண்ட் கோ'' படத்தில் பாண்டியராஜனோடு ஜோடியாகி நடித்து வருகிறார்.
சினிமாத்துறையில் ஒரு பெண் நினைத்தால், எதுவும் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வரும் படமாக இந்தப்படம் திரைக்கு வரவுள்ளது என்றும், நாயகியை மையப்படுத்தி இந்தப்படம் வரவுள்ளது என்றும் படத்துக்கு இசையமைக்கும் புதுமுக இசையமைப்பாளர் கதை சொல்கிறார்.
#யப்பா பாத்துப்பா... அம்மண்ணி படத்துலையும் ஏதாவது சொல்லிடப்போகுது!