அபிசேக் பச்சன் மற்றும் நம்ம அசின் ஜோடியாக நடித்துவரும் திரைப்படம்தான் ''ஆல் இஸ் வெல்'' . இப்படத்தின் படப்பிடிப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. தமிழில் வாய்ப்பில்லாத அசினும் மிகுந்த ஈடுபாட்டோடு இந்தப் படமாவது தனக்கு சரிந்த வாய்ப்புக்களை தூக்கி நிறுத்துமென ஆர்வத்தோடு நடித்து வந்தார்.
இவ்வாறு நடைபெற்று வந்த படப்பிடிப்புக்கள் திடீரென இரத்தாகி நிறுத்தப்பட்டதாக தகவல் கசிந்தது.
என்னாச்சும்மானு விசாரித்துப் பார்த்தால் விபரம் வேறுமாதிரி வந்தது.
அய்யராத்து நாட்டுக் கட்டையாய் வந்து கலக்கிய அழகு நடிகை அசின், இந்தப் படத்தில் எடை அதிகரித்துக் காணப்படுவதால், தொடர்ந்தும் அப்படியே காட்சிகளை எடுத்தால் அசின் இன்னும் அசிங்கமாக தெரிவார் . அதுமட்டுமிலாமல் அவரது மார்க்கெட்டும் சரிந்து போகுமென பயந்துதான் படத்தின் படப்பிடிப்புக்களை இரத்து செய்து சிறிது நாட்களுக்கு அசினை உடலைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடும்படி படக்குழு விடுப்பு கொடுத்துள்ளதாக தெரிகிறது.
ஆக மொத்தத்தில், அசினின் அதிகரித்த உடல் இடையே இந்த நிலைமைக்கு காரணமென தெரிகிறது.
#ஏம்மா இப்பிடி பண்றீங்க?
