வெங்கட்பிரபு இயக்க சூர்யா நடித்து வரும் 'மாஸ்' படத்தின் உரையாடல் பகுதிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மாஸ் எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இறுதிக்கட்டப் பணிகளில் வெங்கட்பிரபு கடுமையாக உழைத்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருப்பினும், இந்த படத்தின் டப்பிங் பணிகளுக்காக சூர்யா மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவரும் பணியாற்றியுள்ளனர். இருவரும் டப்பிங் தியேட்டர் முன்னிலையில் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் சூர்யாவின் அதிகாரபூர்வ சமூக இணையதள பக்கத்தில் நேற்று வெளியாகியுள்ளது. இதனைக் கொண்டு நம்மவர்கள் ஊகித்துள்ளதும் இறுதியில் சரியாகவே தெரிந்துள்ளது.
உழைத்தால் மட்டுமே முன்னேற முடியும் மக்கள்ஸ்.
-கோடம்பாக்கக் குருவி-