பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம், தமிழ் சினிமாவுக்குள் தன் பொற்பாதத்தை பதித்தவர் அழகு நடிகை ஆண்ட்ரியா. பாடகி நடிகை பின்னணி பேசுகின்றவரென பல அவதாரங்களைக் கொண்டவர் ஆண்ட்ரியா.
இந்தவாரம் இவரது நடிப்பில், வலியவன் வரவுள்ளது.
இந்த விஷயம் இப்படியிருக்க, மலையாளத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு அம்மணிக்கு வாய்ப்பு வந்துள்ளது. கதை பிடித்திருக்கிறது. கூட நடிக்கின்றவர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள். ஆனாலும், இறுதியில் இயக்குனர் சொன்ன விசயத்தினால், ஆண்ட்ரியா ஆத்திரமுற்றுள்ளார்.
என்ன சொல்லியிருப்பார் என்று யோசிக்கிறீங்க தானே? அதாவது, கதைப்படி நாயகி தனது தலைமுடியில் அரைவாசியை வெட்டிக் கொள்ள வேண்டுமாம். என்னது? ஆண்ட்ரியா தலைமுடி இல்லாமலா? கடல்ல விழுந்து சாகுப்பான்னு நமக்கே சொல்லத் தோன்றுகிறது அல்லவா? அதேதான் அம்மணியும் சொல்லி, இயக்குனரை கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள முடியாதளவுக்கு அனுப்பியுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-