
டுபாய் விமான நிலையத்தில் தனது வைர மோதிரத்தைத் தவற விட்டாராம் பிரியங்கா சோப்ரா. போலீசில் புகார் கொடுத்தும் பயனில்லை என்கிறார்.

ஷாருக்கான் தனக்கு பிடித்த ஹீரோ என கூறும் அக்ஷரா ஹாசன், தீபிகா படுகோனேவை தனது கனவு நாயகி என புகழ்கிறார்.

கனடாவில் கடும் பனிப்பொழிவால் அஜய் தேவ்கனின் 'ஷிவே' படக்குழு மும்பை திரும்பி விட்டது.

ஒரு வாரமாக கடும் காய்ச்சலில் அவதிப்பட்ட கேத்ரினாவை திடீரென பார்த்து உடல் நலம் விசாரித்தார் முன்னாள் காதலன் சல்மான் கான்.

நடிப்புக்கு முழுக்குப் போட்டு அமிதாப் ஓய்வெடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா.

திரிஷ்யம்' ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். போலீஸ் அதிகாரி வேடத்தை தபு ஏற்கிறார்.

இனி மாதந்தோறும் தனது ரசிகர்களைச் சந்தித்துப்பேச முடிவு செய்திருக்கிறார் ஷாருக்கான்.

இந்த ஆண்டில் 2 மாதங்களில் ஹிந்திப் படங்களின் தொடர் தோல்வியால் தயாரிப்பாளர்கள், கவலையில் உள்ளனர்.

காதலனை திருமணம் செய்த பாடகி ஷ்ரேயா கோஷல் தம்பதிக்கு, ஷ்ரேயாவின் தோழி பிரீத்தி ஜிந்தா தனது வீட்டில் விருந்து கொடுத்தாராம்.
-கோடம்பாக்கக் குருவி-