நியூசிலாந்துக்கு பதிலடி கொடுப்போம் -மைக்கல் கிளார்க்.உலக கிண்ணத்தின் இறுதிப் போட்டி எதிர்வரும் 29 ம் திகதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் பிரெண்டன் மக்கலம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மைக்கல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பங்கெடுக்கவுள்ளன .
இந்த இரண்டு அணிகளும் குழு 'A' யில் இடம்பெற்றிருந்தன,குழுநிலை ஆட்டத்தில் இரு அணிகளுக்குமிடையிலான் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மோசமாக 151 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது..
இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டியில் நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இந்த 2 அணிகளும் இதுவரை மெல்போர்ன் மைதானத்தில் பங்கெடுத்த போட்டிகளில் 4 முறை நியூசிலாந்து அணியும் 15 முறை ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
*T.T