பாலாவின் பரதேசி படத்தில் உழைப்பையும் நடிப்பையும் கொட்டிக் கொட்டி அர்ப்பணித்தார் நடிகர் அதர்வா. அத்தோடு அப்படத்தின் மேல் நம்பிக்கையும் அதிகமாகவே வைத்திருந்தார். ஆனாலும், நடந்த கதை பரிதாபமானது.
வாரிசு நடிகர்கள் கோலோச்சி வரும் கோடம்பாக்கத்தில், அதர்வாவின் பரதேசி மீதான நம்பிக்கையும், அந்தப் படம் வெளியாகி சில நாட்களில் சிதைந்தது. படத்தில் நல்ல பெயரைப் பெற்றுக் கொண்டார். ஆனாலும், அந்தப் பெயர் படங்களை பெற்றுக் கொடுக்கவில்லை. அடுத்து வந்த இரும்புக்குதிரையும் கைவிட்டது.
இதன் பிறகு, தடகள வீரராக நடித்துள்ள ஈட்டி மற்றும் கணிதன், சண்டிவீரன் ஆகிய படங்கள் இப்பொழுது வெளியீட்டுக்கு தயாராய் உள்ளன. இந்நிலையில், அதற்வாவை வைத்து மேலும் சில ஆக்க்ஷன் படங்களை எடுக்க பல இயக்குனர்கள் முயன்று வரும் நிலையில், இப்போதைக்கு அப்படி எண்ணம் என்னிடமில்லை என வரும் வாய்ப்புக்களை மறுத்து வருகிறார் அதர்வா.
-கோடம்பாக்கக் குருவி-