பரபரப்பை உருவாக்கி வரும் அஜித்தின் அடுத்த படத்தில் நடிக நடிகையரைத் தேர்வு செய்யும் படலமும் வேகமாய் நடைபெற்று வருகிறது. இசையில் அனிருத் புகுந்து விளையாட இருக்கிறார். அதே போல, தலயுடன் ஜோடி சேரப்போகும் வாய்ப்பை ஒருவர் இழந்து விட்டார்.
அவர் தான் ஸ்ருதி ஹாசன். அவருடைய குளறுபடிகள் காரணமாக, அவருக்கு படங்களில் நடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டதையடுத்து, அஜித் ஜோடியாக ஒப்பந்தமான அவருடைய வாய்ப்பு நம்ம தமன்னாவுக்கு கைமாறியுள்ளது.
அத்தோடு, முக்கியமான இன்னொரு பாத்திரமாக, அஜித்துக்கு தங்கையாக நடிக்கவும் ஒரு நடிகையை தேடி வந்துள்ளார்கள். அதில் சில படங்களில் நகைச்சுவையில் நடித்த வித்யுலேகா ராமன் மற்றும் நடிகை பிந்து மாதவி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
இறுதியில், பிந்து மாதவி தெரிவாகியுள்ளார். ஆக, அடுத்த படத்திலும் ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் இந்தப்படத்திலும் இணையவுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி.
-கோடம்பாக்கக் குருவி-