ஆர்ப்பாட்டமில்லாமல், தன்னடக்கமாக புன்னகைத்தே தன் வேலைகளை நிறைவு செய்து கொள்ளும் நடிகர் உதயநிதின் கையில் ஏராளமான பட வாய்ப்புக்கள். நல்ல கதைகளாகவும், இளைஞர்களுக்கு பிடித்த படங்களாகவும் தெரிவு செய்து நடித்து வரும் இவரது கையில், இப்பொழுது ஏராளம் கதைகளும் படங்களுமுள்ளன.
இப்பொழுது வெளிவரவுள்ள நண்பேண்டா படத்தை தொடர்ந்து, எமி ஜாக்சனோடு இணைந்து ஒரு படத்திலும், இயக்குனர் அஹமத் இயக்கம் இன்னுமொரு படத்திலும் நடிக்கவுள்ளார்.
அஹமத் இயக்கும் படத்தில் உதயநிதியுடன் கொழுக் மொளுக் ஹன்ஷிகா ஜோடியாக நடிக்கவுள்ளார். இது இரண்டாவது முறையாக இவர்கள் இணையும் படம். அத்தோடு, இப்படத்தில் இன்னுமொரு பிரபலமும் இணைந்துள்ளார். அவர்தான் இளைய திலகம் பிரபு.
படத்துக்கு இதயம் முரளி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. உதயநிதி, ஹன்ஷிகா, பிரபு ஆகியோருடன் இன்னும் பட நட்சத்திரங்களும் இணைந்து கலக்கவுள்ள இந்தப் படத்துக்கு நம்ம அனிருத் இசையமைக்கவுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-