இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வளர்ந்து வரும் தெலுங்குப் படான ஸ்ரீமந்துடு படத்தில் ஸ்ருதி மற்றும் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கிறார்கள். இருவரும் இந்தப் படத்தில் மிக தாராளமாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இப்பொழுது இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. படக்குழுவும் திகைப்பில் ஆழ்ந்துள்ளது. அடடா, படம் வெளியாக முன்னமே இப்படியான புகைப்படங்கள் வந்தால் படத்தின் பெயர் மழுங்கிக் போய்விடுமே என அவர்களுக்கு திகைப்பு.
சரி, புகைப்படம் அந்தப்படம் இந்தப்படம் என்கிறீங்களே, அப்பிடி என்ன படமா...? பரபரப்பா இருக்குய்யா, தயவு செய்து சொல்லுய்யா... இப்படி பலர் பார்த்து முறைக்கிறது புரியுது.
அதாவது, இந்தப் படத்தில் மகேஷ்பாபுவும் ஸ்ருதியும் தோன்றும் ஒரு காட்சி சம்மந்தப்பட்ட புகைப்படங்களை யாரோ ஒருவர் இணையத்தில் பரப்பிவிட, அவை இப்பொழுது பலராலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதனால், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு குறைந்துவிடும் என கூறப்படுகிறது.
இதுதானா? ஹீ ஹீ ஹீஎ
எப்புடு, நாங்களும் பரபரப்பை பத்த வைப்பமுல்ல !!
-கோடம்பாக்கக் குருவி-