பண்டாரகம பிரதேசத்தில் ஞாயிறு பாடசாலைக்கு சென்ற 6 வயது சிறுமியிடம் ஆபாச படங்களை காட்டிய இளைஞர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், பட்டதாரி என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளர்.
புளத்சிங்கள – பெக்கேம பிரதேசத்தை சேர்ந்த இந்த சந்தேக நபர் அந்த சிறுமி கழிவறைக்கு சென்ற போது தனது கையடக்க தொலைபேசியில் இருந்த ஆபாச படங்களை காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் வீட்டுக்கு வந்த சிறுமி இது தொடர்பில் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதன் பின்னர் பெற்றோர் இது தொடர்பில் விகாராதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
பின்னர் விகாராதிபதி அங்கு பொருத்துப்பட்டிருந்த சி.சி.டி.வியை பரிசோதனை செய்த போது குறித்த சந்தேக நபர் 45 நிமிடங்கள் அளவில் விகாரை வளாகத்தில் உலாவியுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே போன்று விகாரை வளாகத்தில் அந்த இளைஞன் உலாவிய போது பெற்றோர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் காவல்துறை சந்தேக நபரை பரிசோதனை செய்த போது அவரது பணப்பையில் பெண்ணொருவரின் அடையாள அட்டையும், இரண்டு ஆணுறைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையின் போது அவர் உள்ளாடைக் கூட அணியால் இருந்தமை தெரியவந்துள்ளது.
எனினும் தான் கழிவறை செல்லவே விகாரைக்கு வந்ததாக அந்த இளைஞன் காவல்துறையிடம் கூறியுள்ளான்.
கைது செய்யப்பட்ட பட்டதாரி இளைஞன் பாணந்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.