முச்சக்கரவண்டிகளுக்கான மீட்டர் கட்டாயப்படுத்தல் சட்டம் காலதாமதம் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இதனைத் தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டிகளுக்கான மீட்டர் கட்டாயப்படுத்தல் சட்டம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்தது.
எனினும், இந்த சட்டத்திற்கு சில முச்சக்கரவண்டி சங்கங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இந்தநிலையிலேயே அந்த சட்ட அமுலாக்கம் காலதாமதமாகலாம் எனவும், இது குறித்து மீண்டும் கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்படும் எனவும் சபையின் தலைவர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.