அபிமான நடிகர்களைத் தலைவனாக எண்ணி, தன் தலைவனுக்காக ஏதேதோ செய்யத்துணியும் ரசிகர்கள் மத்தியில், விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த ரசிகர் தன் நெஞ்சில் 'விஜயின் ஆயுட்கால விசுவாசி' என பச்சை குத்தியுள்ளார். விஜயின் மீது தான் கொண்ட அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தவே இவர் செய்துள்ளார்.
தன் ரசிகனின் அன்பைக்கண்டு அவருடன் சேர்ந்து போட்டோவும் எடுத்துள்ளார் விஜய். அத்தோடு சில அறிவுரைகளும் கூறியுள்ளார், "உங்கள் ஆதரவு மட்டும் போதும், என் மேல் கொண்ட அன்பினால் உங்களை கஷ்டப்படுத்திக்கொள்ளாதீர்கள்" என்றும் கூறியுள்ளார் இளைய தளபதி விஜய்.