நம்ம தமிழ் சினிமாவில் திருமணங்களுக்குக் குறைவில்லை என்று சொல்லலாம். அதிலும் திரையுலகில் உள்ளவர்களே அதிகமாக தமக்குள்ள தாமே சொந்தமாகிக் கொள்கிறார்கள்.
இந்தவகையில், காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அகத்தியன். அவரது மூத்த மகள் கார்த்திகா. இவர்தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர். தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கிய திரு என்பவரை மணந்தார்.
மற்றொரு மகள் விஜயலட்சுமி. சென்னை 28, அஞ்சாதே, சரோஜா , வெண்ணிலா வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வல்லினம் படத்தை இயக்கிய அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பெரோஸ் என்பவரை காதலிக்கிறார். கடந்த 4 வருடமாக தொடரும் இவர்களின் காதல் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
திருமணத்தின் பின்னர் நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் விஜயலட்சுமி என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், இது நிரந்தரமான முடிவா என்பது அவருக்கே தெரியும். இருப்பினும், வாழ்த்துக்களைச் சொல்லி விடுவோம்.
-கோடம்பாக்கக் குருவி-