முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸவிற்கு மூன்றுமாத காலம் விடுமுறை வழங்க நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நாடாளுமன்ற விடுமுறைக்கான கோரிக்கையினை எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா முன்மொழிந்த நிலையில், அதனை எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் டபிள்யூ ஜே செனவிரட்ன வழிமொழித்தார்.
விளக்கமறியல் தண்டனை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தற்போது தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பெசில் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் விடுமுறை பெற்றுக்கொண்டு வெளிநாடு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.