தற்போது பயணங்களை இலகுவாக்கிக் கொள்ளவும், விரைவான பயணத்தை முன்னெடுக்கவும் நம்மில் பலர் GPS வசதிகளை அதிகமாகவே பயன்படுத்துகின்றனர்.
இலங்கையிலும் GPS வசதிகளை பயன்படுத்தி அதிகமான பயணங்கள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் GPS முறையினை பயன்படுத்தி அமெரிக்காவை சேர்ந்த சாரதியொருவர் வாகனத்தை செலுத்திய நிலையில் நீரில் மூழ்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாம் பயணிக்கவிருந்த பகுதியினை GPS வழிகாட்டிய நிலையில், தமது வாகனம் அதன் வழியாகவே பயணித்ததாக குறித்த சாரதி குறிப்பிட்டுள்ளார்.
இவர் பயணித்த பாதையில் ஏரியொன்று இருந்துள்ளது.எனினும் அங்கு கடும் குளிரான காலநிலையினால் குறித்த ஏரி பனிக்கட்டியாக இருந்ததாகவும் அதன் காரணமாகவே தான் அந்த பாதையில் பயணித்ததாகவும் குறித்த சாரதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அங்கு ஆழமாக நீர் இருந்தமை தனக்கு அதிர்ச்சியளித்ததாகவும் சாரதி கூறியுள்ளார்.எனினும் நீருக்குள் மூழ்கிய சாரதியை அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.