Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
ஒரே நாளில் 4 கிரிக்கெட் வீரர்கள் தடை - ஆட்ட நிர்ணயச் சதி

cricketers banned - ஒரே நாளில் 4 கிரிக்கெட் வீரர்கள் தடை - ஆட்ட நிர்ணயச் சதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,232 Views
​இலங்கை அணியின் சுழல்பந்து வீசும் சகலதுறை வீரரான கௌஷால் லொக்குஆராச்சி BPL என்றழைக்கப்படும் Bangladesh Premier League போட்டிகளில் கிரிக்கெட் பந்தயக்காரர்களுடன் தொடர்புகள் வைத்திருந்தமைக்கும், தெரிந்த தகவல்களை உரிய முறையில் முறையிடாமைக்குமாக ​பங்களாதேஷ் கிரிக்கெட் விசாரனைக்குழுவினால் 18 மாத காலத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.



கௌஷால் லொக்குஆராச்சி வாகன விபத்து வழக்கில் சம்பந்தப்பட்டு சில காலம் இலங்கை அணிக்காக விளையாடாமல் இருந்தவர்.
4 டெஸ்ட் மற்றும் 23 ஒருநாள் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார்.

இவரோடு முன்னாள் நியூசீலாந்து வீரர் லூ வின்சென்ட்டும் தடைக்கு ஆளாகியுள்ளார். வின்சென்ட்டுக்கு அவர் வைத்திருந்த தொடர்புகளுக்காக 3 ஆண்டுகாலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



ஏற்கெனவே பல நாடுகளிலும் இடம்பெற்ற போட்டிகளில் நடந்த போட்டி நிர்ணயம் தொடர்பாக தனக்குத் தெரிந்திருந்ததாக அண்மையில் பகிரங்கப்படுத்தியிருந்தார் வின்சென்ட்.

இவர் நியூ சீலாந்துக்காக 23 டெஸ்ட் மற்றும் 107 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
எனினும் கடந்த ஏழு ஆண்டுகளாக இவர் நியூ சீலாந்து அணிக்காக விளையாடியிருக்கவில்லை.

இதேவேளை பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அஷ்ரஃபுல் 2013ஆம் ஆண்டு பருவகாலப் போட்டிகளில் கிரிக்கெட் சூதாட்டங்களில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டமையால் 8 வருட காலத் தடைக்கு ஆளாகியுள்ளார்.

மிக இளம் வயதில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கெதிராக சதம் அடித்தவர் உட்பட பங்களாதேஷ் அணிக்காக பல பெருமைகளைப்பெற்றவர் அஷ்ரஃபுல்.

​அஷ்ரஃபுல் 61 டெஸ்ட் போட்டிகள், 177 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 23 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.​

லொக்குஆராச்சி மற்றும் அஷ்ரஃபுல் ஆகிய இருவர் மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டவர்களில் தாங்கள் குற்றம் இழைத்தவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டவர்கள்.

இதேவேளை இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளில் ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டுக்களில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த நவெட் ஆரீஃப் இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் ஆயுட்கால கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ளார்.


மிக நீண்ட விசாரணைகளின் பின்னரே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

உப்பைத் தின்றால் தண்ணி குடிக்கத்தானே வேண்டும்.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top