4,659 Views
9,321 Views
காதலிக்கிறதுக்கு பொண்ணு இருக்கோ, இல்லையோ? கடலை போடுறதுக்கு செல்போன் இருந்தா போதும் என்கிற மனேபாவம் இன்றைய யூத் களில் பலருக்கும் இருக்கிறது.
இதையெல்லாம் மனசில் கொண்டு ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் திம்மம்பள்ளி சந்த்ரா. படத்தின் பெயர் ‘கைபேசி காதல்’. த.சக்திவேல் தயாரித்திருக்கும் இந்த படம் திரைக்கு வந்தால், சந்துல பொந்துல சைட்ல ஏன் வானத்துல இருக்கிறவங்க கூட கொந்தளித்துக் கிளம்பினால் ஆச்சர்யமில்லை. ஏன்?
படத்தில் கதாநாயகன் செல்போனுக்கு தாலியே கட்டி விடுகிறார் என்பதால்தான்! என்னய்யா இப்படியொரு கலாச்சார சீரழிவு என்றெல்லாம் மற்றவர்கள் கூக்குரல் இடுவதற்கு முன்பே, சந்த்ரா தனது நியாயத்தை கூறிவிடுகிறார். என்னவென்று?
முன்னெல்லாம் காதல் தோல்வி வந்தா சம்பந்தப்பட்ட பொண்ணு மேல ஆசிட் வீசுறது. கொல பண்றதுன்னு இருந்தது வாலிபர்கள் அப்ரோச். ஆனால் இந்த படத்தில் காதல் தோல்வி இருந்தாலும், தன் காதலுக்கு காரணமானது செல்போன்தானே? அதை என்ன செய்கிறார் அவன் என்பதுதான் படத்தின் நச் என்கிறார்.
ஹலோ மை டியர் wrong நம்பர். கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம் என்றெல்லாம் தொலைபேசி வழியே காதலை கண்டுபிடித்த தமிழ்சினிமாதான் இது. அதையெல்லாம் தாண்டி அட்வான்சாக ஒரு அதிர்ச்சி முடிவை கொடுக்கப் போகிறார் திம்மம்பள்ளி சந்த்ரா.
படம் முடிஞ்சு வெளிவரும்போது அவரவர் செல் போன்களை தூர எறியுறாங்களோ, துடைச்சு வச்சுக்குறாங்களோ, அது படம் சொல்லும் மெசேஜில் இருக்கிறது.
===CASTRO RAHUL ===
3,269 Views
4,713 Views
2,573 Views
2,984 Views
3,788 Views
2,052 Views
3,319 Views
8,891 Views
1,885 Views
ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.கே.சக்திவேல் தயாரிக்கும் படம் – மாங்கா. இந்த படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகிகளாக அத்வைதா, லீமா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் இளவரசு, ரேகா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், தென்னவன், ஷாம்ஸ், வெங்கல்ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – செல்வா ஆர்.எஸ்
இசை – பிரேம்ஜி அமரன்
படத்தொகுப்பு – சுரேஷ்அர்ஸ்
கலை – Dr.ஸ்ரீ
நடனம் – அஜெய்ராஜ்
சண்டைப் பயிற்சி – மிரட்டல் செல்வா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.எஸ்.ராஜா.
தயாரிப்பு – பி.சி.கே.சக்திவேல்
‘மாங்கா’ படம் பற்றி இயக்குநர் ஆர்.எஸ்.ராஜா சொல்லும் போது..
“இந்த படத்தில் சிவாவாக வரும் பிரேம்ஜி தன்னை ஒரு பெரிய விஞ்ஞானியாக நினைத்துக் கொண்டிருக்கும் அடி முட்டாள். இவனுடைய வாழ்நாள் குறிக்கோள் தானே சொந்தமாக ராக்கெட் தயாரித்து அதன் மூலம் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைத்து மக்களை காக்க வேண்டும் என்பதுதான்.
இவனுடைய முட்டாள் தனமான கண்டுபிடிப்புகளால் எல்லா மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இவனுடைய கண்டுபிடிப்பால் 1950 காலகட்டத்தை சேர்ந்த பாகவதர் (பிரேம்ஜி)யை சந்திக்கிறான்.
இருவருக்குள்ளும் கடும் போட்டி ஆரம்பிக்கிறது.
இருவரில் யார் ஜெயித்தார்கள், சிவா ராக்கெட் அனுப்பி ஓசோன் ஓட்டையை அடைத்தானா? என்பதே திரைக்கதை.” என்றார் இயக்குனர்.
கதை செம இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும்போலருக்கே…
=== CASTRO RAHUL ===
4,845 Views
3,001 Views

7,471 Views
எஸ்.ஏ.வி. பிக்சர்ஸ் சார்பில் த.சக்திவேல் தயாரிக்கும் படம் ‘கைபேசி காதல்’. இதில் கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி இவர்களுடன் நடிகர் கிஷோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். திம்மம் பள்ளி சந்திரா இதனை இயக்கியுள்ளார்.
பலரது காதலுக்கு கைபேசி உதவுகிறது. அதனால் கைபேசி மீது மோகம் இன்று அதிகரித்து வருகிறது. ஆனால் கைபேசி என்கிற ஜடப் பொருள் மீதே காதல் கொள்கிறான் இளைஞன் ஒருவன் என்றால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வித்தியாசமான கதை கொண்ட படம்தான் ’கைபேசி காதல்’.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, படக்குழுவினரை வாழ்த்திவிட்டு, தான் சொந்த ஊரிலிருந்து 20 கி.மீ. சைக்கிளில் சென்று, ‘முரட்டுக்காளை’ படப்பிடிப்பு பார்த்த அனுபவத்தைக் கூறினார்.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் எளிமையைப் பற்றிக் குறிப்பிட்ட பேரரசு, “திறமை உள்ளவர்களுக்கு கர்வம், தலைக்கனம் இருக்கலாம். அது கர்ப்பிணிப் பெண்ணின் வயிறைப் போல மரியாதைக்கு உரியது. திறமை இல்லாதவர்களின் தலைக்கனம் என்பது பெண்ணின் தொப்பை வயிறு போன்றது. தொப்பையை ரசிக்க முடியுமா? திறமை இருந்து கர்வம் இல்லாதவர்கள் நடிகை இலியானாவின் வயிறு, இடுப்பு போன்றவர்கள். இலியானாவின் இடுப்பு மெலிதாக இருக்கும். அது ரசிக்கத்தக்கது. அப்படி ரசிக்கத் தக்க ஒருவர்தான் எஸ்.பி.முத்துராமன்.
“அவர் என்றும் எளிமைக்குச் சொந்தக்காரர். நான் ஏவிஎம்மில் படப்பிடிப்பில் இருந்தபோது அவர் அங்கு வந்து என்னைப் பாராட்டினார். தேடிச் சென்று பாராட்டும் அந்த உயர்ந்த பண்பை அவரிடம் கற்றுக் கொண்டேன்’ ‘என்றார் இயக்குனர் பேரரசு.
அது போகட்டும்…! ஆண்ணின் ரசிப்புக்காக பெண் தன்னை வருத்தி ஒட்டிய வயிறுடனும், மெல்லிய இடுப்புடனும் இருக்க வேண்டும் என்ற ஆரோக்கியமற்ற கருத்தாக்கத்தை பெண்ணியவாதிகள் நார் நாராய் கிழித்தெறிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம் பெண்ணின் வயிறு மற்றும் இடுப்பு ஆராய்ச்சியாளரான பேரரசுக்குத் தெரியுமா…?
=== CASTRO RAHUL ===
2,174 Views