தனுஷின் மனிதாபிமானம்
Dhanush # Award # Kaakka muttai - தனுஷின் மனிதாபிமானம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
தமிழில் படம் வெளிவரும் முன்பே பல விருதுகளையும் பாராட்டுகளையும் அள்ளிக்குவித்த சிறுவர் படம் என்றால் அது நிச்சயம் காக்கை முட்டை படம்தான் . தனுஷும்இயக்குனர் வெற்றிமாறனும் சேர்ந்து தயாரித்த இந்தப்படம் தேசிய விருதையும் வென்று விட்டது . வெற்றி மாறனிடம் உதவியாளராக இருந்த மணிகண்டன் இயக்கிய இந்தப்படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் ஆகிய இரண்டு சிறுவர்களின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.
உண்மையாகவே வறுமை நிலையில் இருக்கும் இந்த இரண்டு சிறுவர்களின் மொத்த கல்விக்கான செலவை தான் பொறுப்பேற்பதாக தனுஷ் அண்மையில் தெரிவித்துள்ளார் . அவர்கள் விரும்பியதைப் படிக்கலாம் என்றும் அல்லது நடிப்புத்துறையை தெரிவு செய்தாலும் அதற்கும் தான் உதவி செய்வதாக தனுஷ் கூறியுள்ளார் .
-கோடம்பாக்கக் குருவி-