7,133 Views
அமெரிக்காவின் நியூ ஜேர்சியைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
அதன் பிறகு அவரது காதலர் பிரிந்து சென்று விட்டாராம்.
இதையடுத்து தனது குழந்தைகளுக்கு பிரிந்து சென்ற காதலர் ஜீவனாம்சம் வழங்கக் கோரி அப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கின் போது நீதிபதி குழந்தைகளின் மரபணுவை சோதிக்க நீதிபதி உத்தரவிட்டார். மரபணு சோதனையில் ஒரு குழந்தைக்கு பிரிந்து சென்ற காதலர் தந்தை என்பது தெரிய வந்தது.
மேலும் மற்றொரு குழந்தை வேறொரு நபருக்கு பிறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அந்த பெண்ணிடம் கேட்டதற்கு காதலருடன் உறவு கொண்ட மறு வாரத்தில் வேறு ஒருவருடனும் உறவு கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டாவதாக உறவு கொண்ட நபர் யார் என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதை கேட்ட நீதிபதி அப் பெண்ணின் முன்னாள் காதலர் அவருக்கு பிறந்த குழந்தைக்கு மட்டும் வாரத்திற்கு பராமரிப்பு தொகை அளித்தால் போதும் என்று கூறி தீர்ப்பளித்துள்ளார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், விந்தணுக்கள் 5 நாட்கள் வரை உயிரோட்டத்துடன் இருக்கும். அதனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் உறவு கொண்டுவிட்டு அடுத்த வாரத்தில் வேறு ஒரு ஆணுடன் உறவு கொண்டால் 2 பேரின் விந்தணுக்கள் 2 கருமுட்டைகளுடன் சேர்ந்து இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளது. இது போன்று 10 லட்சத்தில் ஒருவருக்கு நடக்கும் என்றனர்.