61,252 Views
குறித்த வர்த்தகர் , தனது அலுவலகத்துக்கு புதிதாக சேர்ந்த இளம் பெண்ணுடன் வெள்ளவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கு சென்றுள்ளார்.
அவ் வர்த்தகருக்கு 49 வயதெனவும், குறித்த இளம் பெண்ணின் வயது 22 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களது கள்ளத் தொடர்பை அவதானித்து வந்த கும்பலொன்று பணம் பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.
இருவரும் ஹோட்டலில் இருந்து வெளியேறுவதை அவதானித்த கும்பல் தங்களை பொலிஸ் என அடையாளப்படுத்தியுள்ளதுடன், வயது குறைந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது சட்டவிரோதமானதெனக் கூறியதுள்ளதுடன் கள்ளத் தொடர்பை பகிரங்கப்படுத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளது.
திருடன் காலில் தேள் கொட்டியதைப் போல பயந்த அவ் வர்த்தகர் , விடயத்தை வெளியே சொன்னால் தன்னால் சமூகத்துக்கு முகங்கொடுக்க முடியாதென தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த மோசடி கும்பல் தமக்கு 1 இலட்சம் பணத்தை தரும் படி கோரியுள்ளது, கையில் பணம் இல்லாத வர்த்தகர் தனது தங்க சங்கிலியொன்றை அடகு வைத்து 120,000 ரூபா பணத்தை கொடுத்து ஒருவாறு வீடு திரும்பியுள்ளார்.
எனினும் இச்சம்பவம் குறித்த வர்த்தகரின் மனதில் குடைச்சலாகவே இருந்துள்ளது.
இந்நிலையில், அவ் வர்த்தகர் தனது பொலிஸ் நண்பரொருவருக்கு மேற்படி சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதன்போது அந் நண்பர் , 16 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுடன் , அவரின் விருப்பத்துடன் உறவு வைத்துக்கொள்வதில் எவ்வித தடையுமில்லையென தெரிவித்துள்ளார்.
இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டமையை வர்த்தகர் அறிந்துகொண்டுள்ளார்.
பின்னர் பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதுடன், துரிதமாக செயற்பட்ட பொலிஸார் அக் கும்பலை கைதுசெய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நட த்தப்பட்ட விசாரணைகளில் அக் கும்பல் இவ்வாறு பலரிடம் மோசடி நட த்தியுள்ளமை தெரியவந்துள்ளது.