பொரள்ளை பிரதேசத்தில் பழைய கடதாசிகளை கொள்வனவு செய்யும் நிலையமொன்றில் மீட்கப்பட்ட ஜனாதிபதி காரியாலயத்திற்கு உரித்தான ஆவணங்கள் பற்றி தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தப்பட்டு வருகின்றன.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி காரியாலயத்திற்கு சொந்தமான சில முக்கிய ஆவணங்கள் நேற்று மாலை பொரளை பகுதியிலிருந்து மீட்கப்பட்டன.
பொரளை காவல்துறையினருக்கு பிரதேசவாசியொருவர் வழங்கிய தகவலை அடுத்து அங்கு தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.