Pungudutheevu murder of a girl - புங்குடுதீவு சம்பவம் - வடக்கு மற்றும் கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
6,252 Views
புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பாக இன்று வடக்கிலும், கிழக்கிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் பலவும் மூடப்பட்டுள்ளதுடன். பல அமைப்புகள் போராட்டங்களை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனிடையே, மன்னாரிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில். திருகோணமலை நிலாவெளி பிரதேசத்திலும் மாணவர்கள், புங்குடுதீவு மாணவி படுகொலை குறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.