இந்த ஆய்வின்படி அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளால் அதிகமானவர்கள் மரணிப்பதாக குறித்த ஆய்வு கூறுகின்றது. 195 நாடுகளில் நடத்திய ஆய்வு முடிவுகளின் பிரகாரம், உணவு தொடர்பான இறப்பு வீதத்தில் உஸ்பெகிஸ்தான் நாடு முன்னிலை வகிக்கின்றது.
அமெரிக்கா 43வது இடத்திலும் , பிரிட்டன் 23வது இடத்திலும், சீனா 140வது மற்றும் இந்தியா 118 வது இடத்திலும் உள்ளன. மக்கள் தங்கள் உணவில் கொட்டைகள் மற்றும் விதைகள், பால் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றை நுகர்வது மிகவும் குறைவாக காணப்படுகின்றது. இந்தநிலையில், இந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பருப்பு மற்றும் விதைகள் வழங்கப்பட்ட அளவுகளில் 12 சதவிகிதம் மட்டுமே மக்கள் உண்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட 21gமில் சராசரியாக 3gதான் ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட, சர்க்கரை பானங்கள் 10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள். சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு போன்ற வகைதொகையான நோய்களுக்கு காரணி ஆகின்றது. கடந்த 2017 ல் உணவு சம்பந்தமான இறப்புக்கள், 11 மில்லியன் என்று இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் இதய நோய்களாலும், புற்றுநோயால் சுமார் 913,000 பேரும், 2 நீரிழிவு நோய்களால் 339,000 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக குறித்த ஆய்வு கூறுகின்றது. உலகில் இருக்கும் ஆபத்து காரணிகளை விட அதிகமான இறப்புகளுக்கு சுகாதாரமற்ற உணவே காரணம் என்று கூறுகிறார்கள்.