கடந்த 19ஆம் திகதி மாத்தறையில் இடம்பெற்ற இராணுவ வெற்றி நிகழ்வின்போது கருங்கல்லை வைத்திருந்த இரண்டு கடற்படை வீரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வின் போது அவையவங்களை இழந்த கடற்படை வீரர்களை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிவந்த கடற்படை வீரரிமிருந்தே இவ்வாறு கருங்கல் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இவர்கள் மாத்றை நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.